எனக்கு மலை ரெம்ப பிடிக்கும். ஏண்ணா மலை பெரிசா, அழகா, நெறைய அழகழகான மரங்கள், மிருகங்கள், குரங்கு எல்லாம் இருக்கும்லா, அதனால தான் மலைய ரெம்ப பிடிக்கும்.
அதுவும் எங்க ஊரு மலையத்தான் எனக்கு ரெம்ப பிடிக்கும். எங்க ஊருமலை பேரு காணியாறு மலை. அதுக்கு எதுக்கு காணியாறு மலைண்ணு பேருவந்தது தெரியுமா?…
தெரியாதா?…
பரவாயில்ல, சொல்ரேன்…நானே சொல்ரேன்…கொஞ்சம் பொறுங்க…
அந்த மலையடிவாரத்துல எங்களோட மாந்தோப்பு இருக்கு. இங்கு உள்ள மா, கொய்யா, புளி மரங்களை என் தாத்தா மார்த்தாண்டம் தான் சின்னப்பையனா இருக்கும் போதே அவங்க அப்பா, அம்மா கூட சேர்ந்து வைச்சி வளர்த்தாங்க.
அந்த மாந்தோப்புல ஒரு நீர்ச்சுனை இருக்கு. இதுக்குப் பேருதான் காணியாறு. காணியாறுண்ணா சின்ன ஆறு அப்படிண்ணு அப்பா சொன்னாங்க. அந்த சுனைய வச்சுத்தான் எங்க தோப்புக்கு காணியாறு விளை-ண்ணும், மலைக்கு காணியாத்து மலைண்ணும் பேரு வந்தது.
சரி சரி நேரமாகுது… எனக்குப் பிடிச்ச எங்க ஊரு காணியாறு மலையப் பாருங்க.
ஃஃஃ
அண்மைய பின்னூட்டங்கள்