வந்துட்டோம்ல…

Aishwarya-001

இது நான் ஐஸ்வர்யா. அப்பா, அம்மா, மாமா, அத்தை எல்லாரும் செல்லமா ஐஸ் அப்படிண்ணு கூப்பிடுவாங்க.

எங்க தாத்தா என்ன ஐஸ்வர்ய லட்சுமின்னுதான் கூப்பிடுவாங்க. பாவம் தாத்தா இப்ப இல்ல கடவுள்கிட்ட போய்ட்டாங்க.

என் அண்ணா பெயர் ஆதித்யா மார்த்தாண்டம். எங்க தாத்தா பேரும் மார்த்தாண்டம் தான். தாத்தா நிறைய கவிதை எழுதியிருக்காங்க. அப்பா படிக்கும் போது நானும் கேட்டு இருக்கேன்.

அப்பாவும் கவிதை எழுதுவாங்க. இங்க நெட்ல அப்பா கவிதை போடும்போது பார்த்துட்டு இருப்பேன். அப்பா எனக்கும் இது மாதிரி கம்யூட்டர்ல வேணுமே, நான் வரையர படத்தையும் என் போட்டோவையும் போட வேணுமேண்ணேன். அப்பா இது வச்சி தந்தாங்க.

எனக்கு ஒழுங்கா கம்யூட்டர்ல எழுத வராது. நான் சொல்லச்சொல்ல அப்பாத்தான் எழுதுவாங்க. நானும் சீக்கிரமா எழுத கத்துகிட்டு எழுதுவேன்.

நான் இப்போ பரதமும் பாட்டும் கத்துகிட்டு இருக்கேன்.
நான் எத்தனாம் வகுப்பு படிக்கிறேன் தெரியுமா?….
தெரியலியா?…நானே சொல்றேன், இப்போ இரண்டாம் வகுப்பு படிக்கிறேன். இப்போ அரைவருட பரிட்சை நடக்குது.

இன்னைக்கு இது போதும், வரட்டா…

ஃஃஃ

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. kalyanakamala
  டிசம்பர் 17, 2007 @ 17:03:28

  மிகவும் நல்லது ஐஸ்வர்யா! நீ தமிழ் பேச, படிக்க கத்துக்கறத பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வெளினாட்டுல இருக்குற சின்ன பிள்ளைகள் தமிழ சுத்தமாக மறந்து பொயிடறது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் நீ உன் அப்பாவின் துணையுடன் கற்றுக்கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீ மேலும் மேலும் கற்றுக்கொண்டு இணைய தளத்தில் அசத்த என் வாழ்த்துக்கள்.

  ஆசிகளுடன்

  கமலா

  மறுமொழி

 2. mayooresan
  டிசம்பர் 17, 2007 @ 20:28:29

  குட்டித் தங்கச்சி.. தொடர்ந்து எழுதுங்கோ! 🙂

  மறுமொழி

 3. விக்னேஸ்வரன்
  டிசம்பர் 19, 2007 @ 13:53:18

  நீங்க குட்டி பாப்பாவா?? நல்ல எழுதி இருகிங்க….

  மறுமொழி

 4. ஐஸ்வர்யா கலைஅரசன்
  டிசம்பர் 20, 2007 @ 08:53:56

  கமலா அம்மா ரொம்ப நன்றி.
  இரண்டு நாள் பரிட்சை இருந்தது அதனாலதால் உங்களுக்கு பதில் போடமுடியல்ல.

  தொடர்ந்து பாருங்க சரியா.

  மறுமொழி

 5. ஐஸ்வர்யா கலைஅரசன்
  டிசம்பர் 20, 2007 @ 08:56:18

  “குட்டித் தங்கச்சி.. தொடர்ந்து எழுதுங்கோ!”

  ரொம்ப நன்றி மயூரேசன் அண்ணா.

  எனக்கு தோணுரத கண்டிப்பா எழுதச்சொல்ரேன். சரியா.

  தொடர்ந்து வந்து பாருங்க.

  மறுமொழி

 6. Baby Pavan
  டிசம்பர் 20, 2007 @ 10:41:56

  வாங்க வாங்க ஐஸ்வர்யா அக்கா நீங்களும் எங்க குட்டீஸ் கார்னர்க்கு வர்ரீங்களா…

  மறுமொழி

 7. குட்டிபிசாசு
  டிசம்பர் 20, 2007 @ 10:48:20

  சீக்கிரம் எழுத கத்துகிட்டு, நீங்களே நிறைய எழுதுங்க! நீங்கள் வரைந்த படங்க்ளையும் போடுங்கள்! வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

 8. நிலா
  டிசம்பர் 20, 2007 @ 13:18:12

  ஐஸுக்காவுக்கு வெல்கம் வெல்கம்

  மறுமொழி

 9. Vishnu
  பிப் 06, 2008 @ 13:19:03

  அன்புள்ள ஐஸ்வர்யா ….நீ படிப்பு , ஓவியம் , நடனம் ..அனைத்து துறைகளிலும் நல்ல தேர்ச்சி பெற்று எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் திகழ வாழ்த்துகிறேன் …

  மறுமொழி

 10. Priya
  மார்ச் 05, 2008 @ 09:55:36

  Hi,

  குட்டி cute தங்கச்சி, Good work, Keep it up

  All the best

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: