வந்துட்டோம்ல….எப்படி இளவரசியாட்டம் இருக்கேனா?.

இவளே இளவரசி

ஐஸ்வர்யா

சொர்க்க வாசல்…

ஸ்ரீரெங்கம்_சொர்க்கவாசல்

ஸ்ரீரெங்கம் ரெங்க நாதர் கோயிலில் சொர்க்க வாசல் முன்பாக நான், என் நேர் பின்னால் ஆதி அண்ணன், என் பக்கத்தில் தம்பி பிரஜி, அவனுக்கு பின்னால் அண்ணன் பிரசாந்த், நடுவில் அண்ணன் விக்னேஷ்(கடைசி பெயர் மூவரும் பெரியம்மா மகன்கள்)

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…

மனசுக்கு என்னவோ போல இருக்கு…

பின்ன நினைச்சது எதுவும் நடக்கவா செய்யுது.

அப்பாட்ட எதாவது ஆசைப்பட்டு வாங்கித்தரச்சொன்னா இது எதுக்கு அது எதுக்குண்ணா ஒரே கேள்வி. அப்புரமாவது கேட்டது கிடைக்குமா? பெரும்பாலும் கிடைக்காது…

அதே போலதான்… பாருங்க சைன்ஸ் பரிட்சைக்காக நல்லா படிச்சியிருந்தேன். படிச்சி முடிச்சி அம்மாகிட்டயும் எழுதிக்காட்டிட்டேன்.

ஆனா, மழைவந்ததால நேற்று பரிட்சை இல்ல. இன்றைக்குண்ணு சொன்னாங்க. இன்றைக்கு அப்பா கூட ஸ்கூலுக்கு போன அப்புறம் தான் சொல்லுராங்க….

இன்னைக்கும் ஸ்கூல் கிடையாதாம். இத நேற்றைக்கே சொல்லி இருக்கலாமுல்லா?…

இன்றைக்கு ஸ்கூல் ஏன் கிடையாது தெரியுமா?….

தெரியாதா?…

சொல்லிரட்டா…

இங்க ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோயில்ல இன்றைக்கு சொர்க்க வாசல் திறப்பு அதனாலதான்.

திருச்சிக்கு நாங்க வந்து நாலு வருசம் ஆச்சி ஆனா அப்பா ஒருக்கா கூட சொற்கவாசல் திறக்கற அன்றைக்கு கூட்டிட்டு போனதில்ல. ஆனா சொற்கவாசல் திறந்திருக்கரப்ப கூட்டிட்டு போயிருக்காங்க.

சொற்கவாசல் முன்ன நின்னுகூட நான் போட்டோ எடுத்து இருக்கேன்.

அந்த படத்த சாயந்தரம் போடரேன் சரியா?…

இப்ப வரேன்…

அப்பாவுக்கு ஆபீஸுக்கு நேரம் ஆகுதாம்.

கணக்கு பிணக்கு ஆமணக்கா?…

நாளை எனக்கு அரையாண்டு தேர்விற்கான கணக்குப்பரிட்சை.

உங்களுக்கு கணக்கு பிடிக்குமா?

பிடிக்காதா?…

ஆனா எனக்கு கணக்கு பிடிக்கும். எங்க அண்ணனுக்கும் கணக்கு பிடிக்கும். எங்க அப்பாவும் முன்னால கணக்குத்தான் படிச்சிருக்காங்க.

எனக்கு கணக்கு மட்டுமில்ல சைன்ஸ், சோசியல் பாடமும் பிடிக்கும்.

எங்க சொந்தக்காரங்க பெறவு நீ என்னவா வருவாய்ண்ணு கேட்ப்பாங்க… எனக்கு சொல்லத் தெரியல…

சரி என்ன எழுதச்சொல்லனும்னு தெரியல… அதனால பெறவு பார்ப்பமா…

வருவோம்ல… வரட்டுமா?!….

ஃஃஃ

காணியாறு மலை.

எனக்கு மலை ரெம்ப பிடிக்கும். ஏண்ணா மலை பெரிசா, அழகா, நெறைய அழகழகான மரங்கள், மிருகங்கள், குரங்கு எல்லாம் இருக்கும்லா, அதனால தான் மலைய ரெம்ப பிடிக்கும்.

அதுவும் எங்க ஊரு மலையத்தான் எனக்கு ரெம்ப பிடிக்கும். எங்க ஊருமலை பேரு காணியாறு மலை. அதுக்கு எதுக்கு காணியாறு மலைண்ணு பேருவந்தது தெரியுமா?…

தெரியாதா?…

பரவாயில்ல, சொல்ரேன்…நானே சொல்ரேன்…கொஞ்சம் பொறுங்க…

அந்த மலையடிவாரத்துல எங்களோட மாந்தோப்பு இருக்கு. இங்கு உள்ள மா, கொய்யா, புளி மரங்களை என் தாத்தா மார்த்தாண்டம் தான் சின்னப்பையனா இருக்கும் போதே அவங்க அப்பா, அம்மா கூட சேர்ந்து வைச்சி வளர்த்தாங்க.

அந்த மாந்தோப்புல ஒரு நீர்ச்சுனை இருக்கு. இதுக்குப் பேருதான் காணியாறு. காணியாறுண்ணா சின்ன ஆறு அப்படிண்ணு அப்பா சொன்னாங்க. அந்த சுனைய வச்சுத்தான் எங்க தோப்புக்கு காணியாறு விளை-ண்ணும், மலைக்கு காணியாத்து மலைண்ணும் பேரு வந்தது.

சரி சரி நேரமாகுது… எனக்குப் பிடிச்ச எங்க ஊரு காணியாறு மலையப் பாருங்க.

ஃஃஃ

காணியாறு மலை - 01

வந்துட்டோம்ல…

Aishwarya-001

இது நான் ஐஸ்வர்யா. அப்பா, அம்மா, மாமா, அத்தை எல்லாரும் செல்லமா ஐஸ் அப்படிண்ணு கூப்பிடுவாங்க.

எங்க தாத்தா என்ன ஐஸ்வர்ய லட்சுமின்னுதான் கூப்பிடுவாங்க. பாவம் தாத்தா இப்ப இல்ல கடவுள்கிட்ட போய்ட்டாங்க.

என் அண்ணா பெயர் ஆதித்யா மார்த்தாண்டம். எங்க தாத்தா பேரும் மார்த்தாண்டம் தான். தாத்தா நிறைய கவிதை எழுதியிருக்காங்க. அப்பா படிக்கும் போது நானும் கேட்டு இருக்கேன்.

அப்பாவும் கவிதை எழுதுவாங்க. இங்க நெட்ல அப்பா கவிதை போடும்போது பார்த்துட்டு இருப்பேன். அப்பா எனக்கும் இது மாதிரி கம்யூட்டர்ல வேணுமே, நான் வரையர படத்தையும் என் போட்டோவையும் போட வேணுமேண்ணேன். அப்பா இது வச்சி தந்தாங்க.

எனக்கு ஒழுங்கா கம்யூட்டர்ல எழுத வராது. நான் சொல்லச்சொல்ல அப்பாத்தான் எழுதுவாங்க. நானும் சீக்கிரமா எழுத கத்துகிட்டு எழுதுவேன்.

நான் இப்போ பரதமும் பாட்டும் கத்துகிட்டு இருக்கேன்.
நான் எத்தனாம் வகுப்பு படிக்கிறேன் தெரியுமா?….
தெரியலியா?…நானே சொல்றேன், இப்போ இரண்டாம் வகுப்பு படிக்கிறேன். இப்போ அரைவருட பரிட்சை நடக்குது.

இன்னைக்கு இது போதும், வரட்டா…

ஃஃஃ