என்னைப் பற்றி…
நான் ஐஸ்வர்யா.
எங்க சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆவரைகுளம். கன்னியாகுமரி எங்க ஊரில இருந்து பக்கம். எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நான் பிறந்தது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம். அப்பாவுக்கு ஊர் ஊரா மாற்றலாகிற வேலை. அப்பா இராஜபாளையம் பக்கத்துல வேலை பார்த்துக்கிட்டு இருக்கும் போது தான் நான் பிறந்தேன்.
இப்போ நாங்க இருக்கிறது திருச்சியில். நான் படிக்கிறது இரண்டாம் வகுப்பு.
நல்லா படம் வரைவேன். எங்க பள்ளிக்கூடத்துல நடந்த படம்வரையும் போட்டில பரிசும் வாங்கியிருக்கேன்.
பரத நாட்டியமும் பாட்டும் பழகிட்டு இருக்கேன்.
அப்பா அம்மா ரெம்ப பிடிக்கும்.
அப்புறம் சாமில கிருஷ்ணன், பிள்ளையார், இலட்சுமி ரெம்ப பிடிக்கும்.
அதுக்கப்புறம் ஹரிணி மாமா குழந்தை, எங்க அரவிந்த். அப்புறமா ஆதி அண்ணன், நரேஷ் அண்ணன், ரகு அண்ணன். பாட்டி, மாமா, அத்தை எல்லோரும்.
ஃஃஃ

Feb 06, 2008 @ 13:17:09
அன்புள்ள ஐஸ்வர்யா ….நீ படிப்பு , ஓவியம் , நடனம் ..அனைத்து துறைகளிலும் நல்ல தேர்ச்சி பெற்று எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் திகழ வாழ்த்துகிறேன் …
Aug 20, 2010 @ 14:21:43
all the best ma……………………………….!