நாளை எனக்கு அரையாண்டு தேர்விற்கான கணக்குப்பரிட்சை.
உங்களுக்கு கணக்கு பிடிக்குமா?
பிடிக்காதா?…
ஆனா எனக்கு கணக்கு பிடிக்கும். எங்க அண்ணனுக்கும் கணக்கு பிடிக்கும். எங்க அப்பாவும் முன்னால கணக்குத்தான் படிச்சிருக்காங்க.
எனக்கு கணக்கு மட்டுமில்ல சைன்ஸ், சோசியல் பாடமும் பிடிக்கும்.
எங்க சொந்தக்காரங்க பெறவு நீ என்னவா வருவாய்ண்ணு கேட்ப்பாங்க… எனக்கு சொல்லத் தெரியல…
சரி என்ன எழுதச்சொல்லனும்னு தெரியல… அதனால பெறவு பார்ப்பமா…
வருவோம்ல… வரட்டுமா?!….
ஃஃஃ
டிசம்பர் 16th, 2007- க்கானத் தொகுப்பு
கணக்கு பிணக்கு ஆமணக்கா?…
Posted in சும்மா... on டிசம்பர் 16, 2007 | 3 மறுமொழிகள் »
காணியாறு மலை.
Posted in இயற்கை, பிடித்தது, குறிச்சொல் இடப்பட்டது இயற்கை, காணியாறு, மலை, Kaaniyaru, Mountain, Nature on டிசம்பர் 16, 2007 | Leave a Comment »
எனக்கு மலை ரெம்ப பிடிக்கும். ஏண்ணா மலை பெரிசா, அழகா, நெறைய அழகழகான மரங்கள், மிருகங்கள், குரங்கு எல்லாம் இருக்கும்லா, அதனால தான் மலைய ரெம்ப பிடிக்கும்.
அதுவும் எங்க ஊரு மலையத்தான் எனக்கு ரெம்ப பிடிக்கும். எங்க ஊருமலை பேரு காணியாறு மலை. அதுக்கு எதுக்கு காணியாறு மலைண்ணு பேருவந்தது தெரியுமா?…
தெரியாதா?…
பரவாயில்ல, சொல்ரேன்…நானே சொல்ரேன்…கொஞ்சம் பொறுங்க…
அந்த மலையடிவாரத்துல எங்களோட மாந்தோப்பு இருக்கு. இங்கு உள்ள மா, கொய்யா, புளி மரங்களை என் தாத்தா மார்த்தாண்டம் தான் [...]